தஞ்சாவூரை சேர்ந்த அஸ்வினி (19) சென்னையில் விடுதியில் தங்கியபடி கல்லூரி படித்து வந்தார். இவர் தனது தோழியின் அறையில் தங்கி இரவு முழுவதும் மது அருந்தியுள்ளார். இதில் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அஸ்வினி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.