சென்னை: சின்ன வெங்காயம் விலை உயர்வு; இல்லத்தரசிகள் கவலை

59பார்த்தது
சென்னை: சின்ன வெங்காயம் விலை உயர்வு; இல்லத்தரசிகள் கவலை
தமிழகத்தில் பல்லாரி மற்றும் சின்ன வெங்காயம் விலை ஒரு மாதத்திற்கு முன்வரை சரிந்து இருந்தது. அதிகபட்சம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு தரமான வெங்காயம் மற்றும் பல்லாரி கிடைத்தது. சில இடங்களில் 100 ரூபாய்க்கு 4 கிலோ பல்லாரி என குவித்துவைத்து கூவிகூவி அழைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.

குறிப்பாக மினி லாரிகளில் சின்ன வெங்காயம், பல்லாரியை மூடை முடையாகக் கொண்டுவந்து முக்கிய பஜார் பகுதியில் வைத்து குறைந்த விலையில் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக சின்ன வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக இருந்துவருகிறது. உள்ள நிலையில் தற்போது பல்லாரி விலையும் உயர்ந்து வருகிறது.

முதல் ரக சின்ன வெங்காயம் மற்றும் பல்லாரி விலை காய்கறி சந்தைகளில் 70 ரூபாயை கடந்து விட்டது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் கர்நாடகா, மகாராஷ்டிராவில் விளைச்சல் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல்லையில் பல்லாரி விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.

அத்துடன் சின்ன வெங்காயம் விலையும் உயர்வதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இதனிடையே தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மேலும் 5 முதல் 10 ரூபாய் வரை சில்லறை விலையில் உயர்வு ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி