பார்க்கிங் கட்டணம் வசூலிக்க முடிவு: மாநகராட்சி அறிவிப்பு

82பார்த்தது
பார்க்கிங் கட்டணம் வசூலிக்க முடிவு: மாநகராட்சி அறிவிப்பு
புதிய டெண்டர் விடும் வரை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை வைத்து பார்க்கிங் கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி வருவாயை அதிகரிக்கும் பொருட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வாகன நிறுத்தங்களை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, தி. நகர் உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட இடங்களில் அமைத்துள்ளது. அங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க ஒப்பந்த அடிப்படையில் டூர்க் மீடியா சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எஸ்எஸ் டெக் நிறுவனத்துக்கு மாநகராட்சி அனுமதி வழங்கியது. இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 5, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 20 வீதம் கட்டணம் வசூலிக்கவும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதை தடுக்க, வாகன நிறுத்த செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஸ்மார்ட் வாகன நிறுத்தங்கள் செயல்படும் பகுதிகளில் 25 மீட்டர் இடைவெளியில் அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும். அதில், வாகன நிறுத்த கட்டண விவரம் மற்றும் அதிக கட்டண வசூல் தொடர்பான புகார் தெரிவிக்க, கட்டண வசூல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகராட்சியின் உரிமம் பெற்ற ஆய்வாளர் ஆகியோரின் தொடர்பு எண்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி