விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டுக்கு போலீஸார் அனுமதி

79பார்த்தது
விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டுக்கு 33 நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி அளித்துள்ளனர். நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி. சாலையில் செப்டம்பர் 23-ம் தேதி நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரினர். இதையடுத்து, 21 கேள்விகளுக்கு 5 நாட்களில் பதில் அளிக்குமாறு விக்கிரவாண்டி போலீஸார் அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து, காவல் துறை கேட்டிருந்த கேள்விகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கடந்த 6-ம் தேதி பதில் கடிதம் அளித்தார். பின்னர், இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய விக்கிரவாண்டி போலீஸார் தற்போது 33 நிபந்தனைகளுடன் விக்கிரவாண்டி மாநாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். அனுமதி கடிதத்தை கட்சியின் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜியிடம் விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் வழங்கினார். மாநாட்டுக்கு அனுமதி கிடைத்ததை அடுத்து, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தவெகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நன்றி ஏஎன்ஐ

தொடர்புடைய செய்தி