அதிமுகவில் சசிகலா மீண்டும் நுழைய முடியாது - ஜெயக்குமார்

57பார்த்தது
அதிமுகவில் சசிகலா மீண்டும் ‘என்ட்ரி’ கொடுக்க முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொதுமக்களை பட்டியில் அடைத்தது போன்று அடைத்து, ஜனநாயக படுகொலையை திமுக செய்தது. தேர்தல் ஆணையம் நேர்மையான தேர்தலை நடத்தினால் நாங்கள் போட்டியிட தயார். தேர்தல் ஆணையத்தால் தேர்தலை நேர்மையாக நடத்துவோம் என உறுதியளிக்க முடியுமா?. அதனால் தான் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்.

இந்தத் தேர்தலில், அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டு, ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அத்தனை பேருமே விக்கிரவாண்டியில் முகாமிடுவார்கள். பணபலம், ஆட்பலம், அதிகார துஷ்பிரயோகத்தைப் பிரயோகப்படுத்துவார்கள். அதனால் இந்தத் தேர்தலில் போட்டியிடுவது அதிமுகவுக்கு சக்தி, காலம், பணம் அனைத்தும் வீண்.

இந்தத் தேர்தலில் திமுகவின் அநியாயம், அக்கிரமம், அராஜகம் அனைத்தும் அரங்கேறும். அதனால் தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்தோம். கட்சி நிர்வாகிகள் கூடி எடுத்த முடிவை, காலம் காலமாக இரட்டை இலைக்கு வாக்களித்த தொண்டர்களும், பொதுமக்களும் கடைபிடிப்பார்கள். அவர்களின் கை வேறு சின்னத்துக்கு வாக்களிக்காது. அவர்களும் தேர்தலை புறக்கணிப்பாளர்கள் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி