புதிய விரிவான சிற்றுந்து திட்டம் – 2024 தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மண்டல அலுவலகங்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள புதிய விரிவான சிற்றுந்து திட்டம் – 2024 மூலம் இதுவரை எத்தனை புதிய வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன, எத்தனை விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன என்பது குறித்து, ஒவ்வொரு மண்டலங்களுக்குட்பட்ட மாவட்டங்கள் வாரியாக அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் மே மாதத்திற்கு முன்பாக இத்திட்டத்தை முழுவதுமாக முடித்துவிடுவோம். இத்திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் மே 1ஆம் தேதி துவக்கிவைக்கிறார் என்றார்.