கொளத்தூர் - Kolathur

கொளத்தூர்: கஞ்சா வைத்திருந்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

கொளத்தூர்: கஞ்சா வைத்திருந்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

கொளத்தூர் பகுதியை சேர்ந்த இரண்டு பேர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பதாக கடந்த 2020 மார்ச் 20ம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, திருவள்ளூர் கற்குழை தெருவில் நின்று கொண்டிருந்த சதீஷ் (32), ரவி (30) ஆகியோரிடம் சோதனை நடத்தியதில் அவர்களிடம் 23 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். கோவிந்தராஜன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் சதீஷுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. ரவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் சந்தேகத்தின் பலனை தந்து அவர் விடுதலை செய்யப்படுகிறார் என்று தீர்ப்பளித்தார்.

சென்னை
சென்னை மெட்ரோ ரயில் பழைய பயண அட்​டை​யை நீட்டிக்க முடிவு
Apr 01, 2025, 17:04 IST/சைதாபேட்டை
சைதாபேட்டை

சென்னை மெட்ரோ ரயில் பழைய பயண அட்​டை​யை நீட்டிக்க முடிவு

Apr 01, 2025, 17:04 IST
ஆலந்தூர் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பழைய பயண அட்டையின் பயன்பாட்டை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டை இன்றுமுதல் முழுமையாக மாற இருப்பதைக் கருத்தில் கொண்டு, ஆலந்தூர் உட்பட பல்வேறு மெட்ரோ ரயில் நிலைய கவுன்டர்களில் பயண அட்டையில் உள்ள மீதித் தொகையைத் திருப்பித் தருமாறு பயணிகள் கேட்டனர். ஆனால், பழைய அட்டையில் உள்ள தொகையை பயணம் மேற்கொண்டு கழிக்குமாறு ஊழியர்கள் பதிலளித்தனர்.  இதனால், பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, "சிங்கார சென்னை அட்டைக்கு மாற பயணிகளை ஊக்கப்படுத்துகிறோம். இந்த பயண அட்டையில் தொகை பூஜ்ஜியம் நிலைக்கு வந்தபிறகு, அவர்களுக்கு ரீசார்ஜ் செய்யாமல், அதற்கு பதிலாக சிங்கார சென்னை அட்டை வழங்கப்படுகிறது.  மேலும், மெட்ரோ ரயில் பயண அட்டையை நிறுத்தி வைக்கவில்லை. மாறாக, படிப்படியாக மாற்ற திட்டமிட்டு உள்ளோம். எனவே, பழைய பயண அட்டையில் இருந்து சிங்கார சென்னை அட்டைக்கு மாற, மேலும் 2 மாதங்கள் வரை கால நீட்டிப்பு செய்யப்படும்" என்றனர்.