தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. மாடியில் இருந்து குதித்த ஊழியர்கள்

78பார்த்தது
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில் பசுபதி பலகை தொழிற்சாலை இயங்கி வந்தது. இங்கு இன்று காலை திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையின் பெரும்பகுதி தீப்பிழம்புகளால் சூழப்பட்டது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள், மாடியில் இருந்து குதித்து தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொண்டனர். இந்த பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்த பதறவைக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நன்றி: UttarPradesh.ORG News

தொடர்புடைய செய்தி