5 நாட்கள் நடந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு நிறைவு

65பார்த்தது
5 நாட்கள் நடந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு நிறைவு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய (2024ம் ஆண்டுக்கான) ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 21 பதவிகளில் 1056 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வை கடந்த ஜூன் 16ம் தேதி நடத்தியது.

இத்தேர்வில் தமிழகத்தில் சுமார் 650 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மெயின் தேர்வு கடந்த 20ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்நிலையில் இறுதி நாளான நேற்று (செப்.,29) விருப்பப்பாடம் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் நடந்து முடிந்தன.

இதுகுறித்து சங்கர் ஐ. ஏ. எஸ். அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ். டி. வைஷ்ணவி கூறியதாவது: சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு 5 நாட்கள் நடந்தன. மெயின் தேர்வுக்கான ரிசல்ட் அனேகமாக வருகிற டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் வாய்ப்புள்ளது. ஜனவரி மாதத்தில் நேர்காணல் நடைபெறும். தொடர்ந்து மெயின் தேர்வு, நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதில் தேர்வர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், பட்டியலில் உள்ள தகுதிநிலை அடிப்படையிலும் பணி ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி