தமிழக அரசின் 11 துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரை திட்டங்கள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி, திட்டப் பணிகளை முடித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.
தமிழக அரசின் நெடுஞ்சாலை, பள்ளிக்கல்வி, மின்சாரம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சுகாதாரம், சமூக நலம் உள்ளிட்ட முக்கியமான 11 துறைகளின் கீழ்வரும் திட்டங்கள் முக்கியமான திட்டங்கள் முத்திரை திட்டங்கள் என்ற அடிப்படையில், அவற்றின் முன்னேற்றம் குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் அவ்வபோது ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று(செப்.19) தலைமைச் செயலகத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் முத்திரை திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தலைமைச்செயலர் நா. முருகானந்தம் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள், துறைத்தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், மின்துறை உள்ளிட்ட ஒவ்வொரு துறைகள் சார்பிலும் செயல்படுத்தப்படும் முத்திரை திட்டங்கள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அத்துடன், பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.