நீட் தேர்வில் எவ்வித குளறுபடியும் இல்லை: நயினார் நாகேந்திரன்

50பார்த்தது
நீட் தேர்வில் எவ்வித குளறுபடியும் இல்லை என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் இன்று பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், தமிழக முதல்வர் இன்று நீட் தேர்வு வேண்டாம் என்று மீண்டும் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். எம்பிபிஎஸ் படிக்க ஒரு கோடி, முதுகலை படிப்புக்கு ஐந்து கோடி வரை செலவாகும். நரேந்திர மோடி அரசாங்கம் சுலபமாக ஏழை மாணவர்கள் படிக்கும் வகையில் நீட் தேர்வை வைத்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என மீண்டும் மீண்டும் பேரவையில் தீர்மானம் போட்டு அனுப்புகிறார்கள். உண்மை மெதுவாக சேரும் பொய் வேகமாக சேரும் என்பது போல் திரும்பத் திரும்ப பொய்யைச் சொல்லி அதை உண்மையாக்கப் பார்க்கிறார்கள். பணம் இல்லாமல் ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

நீட் தேர்வில் இந்த ஆண்டு சில முறைகேடுகள் நடந்துள்ளது. அது தொடர்பாக மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இருந்தும் நீட் தேர்வு வேண்டாம் என்று இன்று பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார்கள். ஆனால், நீட் தேர்வு வேண்டும் என்று சொல்லி நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி