சென்னை: தமிழக வேளாண் பட்ஜெட் 2025-26 முக்கிய அம்சங்கள்

74பார்த்தது
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் இன்று காலை சரியாக 9. 30 மணியளவில் தாக்கல் செய்தார்.

> உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும்
> பட்டியல், பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளின் பொருளாதாரத் சுமையினைக் குறைக்கும் திட்டத்துக்கு ரூ. 21 கோடி ஒதுக்கீடு.
> இயற்கை வேளாண்மையைப் பரவலாக்கம் செய்திட இயற்கை வேளாண்மைத் திட்டங்கள் உருவாக்கப்டும்.
> உயிர்ம விவசாயிகளுக்கு இலவச உயிர்ம வாய்ப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
> உயிர்ம விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்
> உயிர்ம விளைபொருட்களில் எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனைக் கட்டணத்துக்கு விவசாயிகளுக்கு முழு மானியம் வழங்கப்படும்.
> ரூ. 52. 44 கோடியில் சிறுதானியப் பயிர்களின் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் தொடங்கப்படும்.
> ரூ. 108. 6 கோடி ஒதுக்கீட்டில் உணவு எண்ணெய்த் தேவையில் தன்னிறைவு அடைய எண்ணெய் வித்துகள் இயக்கம் தொடங்கப்படும்.
> ரூ. 40. 27 கோடியில் மக்காச்சோள சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகாிக்க “மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம்” தொடங்கப்படும்.
> கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ. 297 கோடி ஒதுக்கீடு

தொடர்புடைய செய்தி