திமுக ஆட்சிக்கும், கட்சிக்கும் எந்த இடையூறு வந்தாலும் அதை தடுக்கும் போர்வாளாக மதிமுக இயங்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக்கும், கட்சிக்கும் எந்த இடையூறு வருவதாக இருந்தாலும், அதை தடுக்கும் போர்வாளாக மதிமுக இயங்கும். ஜனநாயகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் அவர்களது கருத்துகளை சொல்ல உரிமை உள்ளது.
தமிழகத்தில் மதுவை எதிர்த்து மதிமுக போராடியதுபோல் வேறு எந்த கட்சியும் கிடையாது. மதுவை ஒழிக்க எல்லோரும் முன்வர வேண்டும். அதற்கு முன்னுரிமை எடுத்து கொள்ளக்கூடிய தகுதி மதிமுகவுக்கு உண்டு என அவர் கூறினார்.