10, 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வினை 25 லட்சத்து 57 ஆயிரத்து 354 மாணவர்கள் எழுத உள்ளனர் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தேர்வினை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். அதேபோல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 9ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதியும் வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.