முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வருகிற 27ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமரிடம் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமக்ரா சிக்ஷா கல்வி திட்டத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி நிறுத்தப்பட்டது. நீட் விலக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு மூலம் தமிழகத்திற்கு கூடுதல் நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.