கூவத்தூர் விவகாரத்தில் த்ரிஷாவை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ. வி. ராஜு பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், 'போகிற போக்கில் நடிகைகள் குறித்து கேவலமாக பேசியிருப்பது தனது மனதை நோகச் செய்கிறது. சமூகத்தை பாதிக்கும் ஆபத்தான செயல்' என குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே த்ரிஷா குறித்த பேச்சால், மன்சூர் சர்ச்சையில் சிக்கியிருந்தார்