சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - Chepauk thiruvallikeni

சென்னை: மாற்று கட்சியினர் மீது தாக்குதல் - பாஜக கோரிக்கை

அயோத்தி குப்பம் பகுதியில், திமுகவினர், மாற்றுக் கட்சியினரை தொடர்ந்து மிரட்டி தாக்குதல் நடத்துபவர்கள் மீது சென்னை மாநகர காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ. என். எஸ். பிரசாத் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் நடத்தும் தொடர் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் துணை முதல்வர் உதயநிதி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அயோத்தி குப்பம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடந்தது. வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமில் மேஜை அமைத்து, வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் தொடர்பாக பாஜகவினர் ஜனநாயக கடமையை ஆற்ற முயன்ற போது, திமுக பகுதி செயலாளர் காமராஜ், 116வது திமுக வட்ட செயலாளர் சசி தூண்டுதலின் பேரில் அயோத்தி குப்பம் பகுதியில் பாஜக மீனவர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெகதீசனை திமுகவை சேர்ந்த ரவுடி விஷ்ணு இரும்பு கம்பியால் தாக்கி அவரது வண்டியையும் உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பாஜக மீனவர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெகதீசனை தாக்கிய திமுகவை சேர்ந்த ரவுடி விஷ்ணுவை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

வீடியோஸ்


சென்னை
சென்னை: வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
Nov 25, 2024, 17:11 IST/

சென்னை: வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Nov 25, 2024, 17:11 IST
கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று(நவ.25) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.  அதனைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது, இலங்கை திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே, நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே, புதுவையிலிருந்து தென்கிழக்கே சென்னையிலிருந்து தென்கிழக்கே 940 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துகொண்டிருப்பதாகவும், அடுத்த 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.