சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - Chepauk thiruvallikeni

சென்னை: கடை வாடகைக்கு ஜிஎஸ்டி: ஏ. எம். விக்கிரமராஜா எதிர்ப்பு

சென்னை: கடை வாடகைக்கு ஜிஎஸ்டி: ஏ. எம். விக்கிரமராஜா எதிர்ப்பு

கடை வாடகை மீதான ஜிஎஸ்டி வரியை முறையாக மறுஆய்வு செய்து வணிகர்களோடு கலந்து பேசி அதன் பின்னர் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்திய நாளிலிருந்து வணிகர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.  சரக்கு மற்றும் சேவை வரி மாற்றங்கள் கொண்டு வரும்போதும் வரி சம்பந்தமாக முடிவுகள் எடுக்கும் முன்னரும் வணிகர்கள் சார்ந்த அமைப்புகளின் நிர்வாகிகளோடு கலந்தாய்வு செய்து பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நீண்டகால கோரிக்கை என்பதை இங்கே நினைவூட்டுகிறோம்.  தற்போது அறிவிக்கப்பட்ட வாடகை மீதான சேவை வரியை முறையாக மறுஆய்வு செய்து வணிகர்களோடு கலந்து பேசி அதன் பின்னர் அமல்படுத்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்துகிறது. உரிய தீர்வுகள் எட்டப்படாவிடில் இணைப்புச் சங்கங்கள் மற்றும் ஆட்சிமன்ற குழு ஒப்புதல் பெற்று கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


சென்னை