போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பது தெரியாதா?: நீதிமன்றம்

64பார்த்தது
போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பது தெரியாதா?: நீதிமன்றம்
தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதை பொருட்கள் தாராளமாகக் கிடைப்பது போலீஸாருக்குத் தெரியாதா? என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னையில் உள்ள குடிசைவாசிகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2017-ம் ஆண்டு ‘பெண்ணுரிமை இயக்கம்’ என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி. பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்தபகுதிகளில் போதை மறுவாழ்வுமையம் அமைக்க வேண்டுமென வழக்கறிஞர் ஆணையர் தனதுஅறிக்கையில் சுட்டிக்காட்டியிருந் தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதை பொருட்கள் தாராளமாகக் கிடைப்பது போலீஸாருக்கு தெரியுமா, தெரியாதா?

போதை பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு உள்ளதா அல்லது சுதந்திரமான வேறு ஒரு அமைப்பிடம் ஒப்படைக்கலாமா? என்று கேள்வி எழுப்பினர்.

சென்னைக்குள் இருந்த குடிசைவாசிகளை மறுகுடியமர்த்தியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட் டுள்ள அடிப்படை வசதிகள் குறித்துமாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவும், தாலுகா சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் செப். 9-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி