கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்டினால் அதனை நிர்வகிக்கும் பொறுப்பை தமிழகத்திற்கு கொடுப்பார்களா என கர்நாடகா துணை முதல்வர் டி. கே. சிவகுமாரிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராசி மணல் அணையை கட்ட தமிழக அரசு மற்றும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அவர்வர், மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு செட் தண்ணீர் வராது காவிரி உபரி நீரை நான்கு முக்கிய அணைகளில் நிரம்பிய பிறகு வேறு வழியின்றி தமிழகத்திற்கு உபநீரை திறந்து விடுகிறார்கள் ஆனால் ராசி மணல் அணை கட்டினால் நமக்கு தேவையான தண்ணீரை நாம் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். வருங்காலங்களில் பருவநிலை மாற்றம் காலநிலை மாற்றம் உள்ளிட்டவர்களால் அடுத்த 10 ஆண்டுகளில் கடுமையான வறட்சி நமக்கு ஏற்பட உள்ளது என ஐநா சபை தெரிவித்துள்ளது இதுபோன்ற நீர் பாசன திட்டங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முறையிலே தமிழக மக்களுக்கு ராசிமணல் அணை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.