அரசிடம் அமோனியா வாயு கசிவைத் தடுக்க பார்முலா உள்ளதா?: சீமான்

66பார்த்தது
தூத்துக்குடியில் தனியார் உரத் தொழிற்சாலையில் இருந்து அமோனியா நச்சுப்புகைக் கசிவுக் காரணமாக உயிரிழந்துள்ள ஹரிஹரன் என்ற இளைஞரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் Tuticorin Alkali Chemicals and Fertilizers Limited என்கிற தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கசிவின் காரணமாக ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதும் மேலும் இருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். சென்னை கோரமண்டல் ஆலையில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அமோனியா நச்சுப்புகைக் கசிவு ஏற்பட்டு 42-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்தனர்.

பந்தயங்களிலும் பயணங்களிலும் ஈடுபாடு கொண்டுள்ள திமுக அரசும் அதன் ஆட்சியாளர்களும் மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்துக்கும் எப்பொழுது கவலைகொள்வார்கள்? பார்முலா பந்தயம் ஏற்பாடு செய்யும் அரசு, தமிழகத்தில் தொடர்ந்து ஏற்படும் அமோனியா நச்சுப்புகைக் கசிவினைத் தடுக்க ஆட்சிமுறை பார்முலா எதாவது வைத்துள்ளதா? தொடர்ச்சியாக ஏற்படக்கூடிய தொழிற்சாலை விதிமீறல்களுக்கும் அதனால் நிகழும் சீரழிவுகளுக்கும் தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி