3 பேர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு

52பார்த்தது
3 பேர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உலக்கை அருவி செல்லும் வழியில் உள்ள பெருந்தலை காடு ஷட்டர் அருகே உள்ள கால்வாயில் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது 3 பேர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர். இதில் இரண்டு பேர் மீட்கப்பட்டனர். சென்னையை சேர்ந்த ரியாஸ்கான் (62) என்பவரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர் கனமழை எச்சரிக்கையால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆபத்தான அருவிகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி