4 பேர் கங்கை நதியில் மூழ்கி உயிரிழப்பு

12934பார்த்தது
4 பேர் கங்கை நதியில் மூழ்கி உயிரிழப்பு
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் கங்கை நதியில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது 6 இளைஞர்கள் நீரில் மூழ்கினர். இதில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவரை உள்ளூர்வாசிகள் மீட்டனர். ககாரியா மாவட்டத்தில் உள்ள பர்பட்டா காவல்நிலைய பகுதிக்கு உட்பட்ட அகுவானி காட் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இளம் பெண் உட்பட 6 பேர் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி