இடி மின்னலோடு கனமழைக்கு வாய்ப்பு

562பார்த்தது
இடி மின்னலோடு கனமழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 14ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது எனவும், இது நவம்பர் 16ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, காரைக்காலில் நவம்வர் 16ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி