முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வரவேண்டிய ஈரக்காற்று, திசை மாறியதால் வெயில் தாக்கம் கடுமையாக உள்ளது. செப்டம்பர் 22-ல் வங்கக்கடலில் புதிதாக வளிமண்டல சுழற்சி உருவாகி, அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது. இந்த நிகழ்வின் போது மேற்கிலிருந்து தமிழகம் நோக்கி இந்த காற்று திரும்ப வாய்ப்புள்ளது. எனவே செப்டம்பர் 22-க்குப் பிறகு வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.