கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாட்டுக்கு எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு, தமிழக ஆதி திராவிடர் நலத் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பள்ளிகள் குறித்த விவரங்கள் முழுமையாக இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது. சமூக நீதி பற்றி பேசிவரும் அரசு, பழங்குடியினர் பள்ளி என அழைப்பது ஏன்? அரசு பள்ளி என மட்டும் அழைக்கலாமே? எனவும், அரசு கல்வி நிறுவனங்களில் பழங்குடியின பள்ளி, கல்லூரி என வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.