கார் பருவ சாகுபடி- தண்ணீர் திறக்க உத்தரவு!

69பார்த்தது
கார் பருவ சாகுபடி- தண்ணீர் திறக்க உத்தரவு!
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து கார் சாகுபடிக்காக 106 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய் ஆகிய மூன்று கால்வாய்களின் கீழுள்ள 15,190 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசனப்பரப்பு நிலங்களுக்கு கார்பருவ சாகுபடிக்கு 19.06.2024 முதல் 02.10.2024 முடிய (106 நாட்கள்) தண்ணீர் திறந்து விட வேண்டும்" என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி