ரயிலில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட பயணிகள் (வீடியோ)

60பார்த்தது
2014 ஆம் ஆண்டில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ரயில்வே துறை நிர்வாகம் மோசமடைந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அந்தத் துறையை மோசமான சூழலுக்கு எடுத்துச் சென்றுள்ளதாக சமீபத்தில் நடந்த ரயில் விபத்துகளை காரணம் காட்டி உள்ளனர். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மக்கள் உயிரை பணயம் வைத்து ரயிலில் ஏறும் காட்சி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், ரயிலின் இரு பெட்டிகளை இணைக்கும் பகுதியில் நின்று கொண்டு பயணிகள் பயணிப்பது போல் உள்ளது. இந்நிலையில், சாதாரண பயணிகள் பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி