"நீட் தேர்வு சர்ச்சைக்குரிய தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளது"

59பார்த்தது
"நீட் தேர்வு சர்ச்சைக்குரிய தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளது"
நீட் தேர்வு சர்ச்சைக்குரிய தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும் அவர், “நீட் வழக்கு விசாரணையை தீவிரமாக எடுத்துக்கொண்டு உச்ச நீதிமன்றம் கவனத்தை ஈர்த்துள்ளது. இனி ஒன்றிய பாஜக அரசும், தேசிய தேர்வு முகமையும் உரிய பதில் அளிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே கோரிக்கை எழுப்பி வருகிறது. எனவே விரைவில் நீட் தேர்வுக்கு தீர்வு காணப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி