கங்கை மாதா என்னை மடியில் ஏந்திக் கொண்டார் - மோடி

83பார்த்தது
கங்கை மாதா என்னை மடியில் ஏந்திக் கொண்டார் - மோடி
கங்கை மாதா என்னை தனது மடியில் ஏந்திக் கொண்டார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது தொகுதியான வாரணாசியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்தியாவின் ஜனநாயக மதிப்பு மக்களவைத் தேர்தல் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. என்டிஏ கூட்டணியை மக்கள் மூன்றாவது முறையாக அரியணை ஏற்றியுள்ளனர். மத்திய அரசின் மிக முக்கியமான நோக்கம் ஏழைகள் மற்றும் விவசாயிகளை பற்றியதுதான்" என்று தெரிவித்துள்ளார்.