கடலூர்: விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நரசிமங்கலம் கிராமத்தில் பேருந்திற்காக சாலை ஓரத்தில் நின்றவர்கள் மீது தறிகெட்டு ஓடிய கார் மோதி விபத்து ஏற்பட்டது. இக்கோர விபத்தில் செந்தில்குமார், செல்வி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி சடலத்துடன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.