சென்னை அண்ணா சாலையில் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “மக்கள் பல இன்னல்களை சந்தித்து கொண்டிருக்கிற சூழலில் கார் பந்தயம் நடத்துவது ஏற்கத்தக்கதல்ல. கார் பந்தயம் நடத்துவதால் பொதுமக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. சென்னையில் கார் பந்தயம் நடத்துவதை அரசு ரத்து செய்ய வேண்டும்” என்றார்.