3 பேரை ஏற்றி கொன்றுவிட்டு, நிற்காமல் சென்ற கார் (வீடியோ)

78பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் சமீபத்தில் சாலை விபத்து நடந்தது. அப்போது வேகமாக வந்த ஸ்கார்ப்பியோ, பைக் ஓட்டி வந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று(மே 19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திவிட்டு கார் நிற்காமல் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி