பச்சரிசி 3/4 கப், பாசிப்பருப்பு 1/4 கப் இரண்டையும் அலசி 30 நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி அரிசி மற்றும் பருப்பை சேர்த்து உப்பு சேர்த்து 5 விசில் வேகவிடவும். குழைவாக வெந்ததும் கரண்டியை வைத்து மேலும் குழைத்துக் கொள்ளவும். பின்னர் மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து இந்த கலவையுடன் சேர்க்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து இதனுடன் சேர்த்து கிளறினால் சுவையான பொங்கல் ரெடி.