நேபாளத்தில் மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் பயங்கர விபத்தில் சிக்கியுள்ளன.
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேருந்துகள் கட்டுப்பாட்டை இழந்து திரிசூலி ஆற்றில் கவிழ்ந்தது. அந்த பேருந்துகளில் டிரைவர்கள் உட்பட மொத்தம் 63 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இடைவிடாது பெய்து வரும் மழையால் அவர்களின் பணி பாதிக்கப்பட்டுள்ளது.