நகைகளுடன் மணப்பெண் மாயம் - மணமகன் வீட்டார் அதிர்ச்சி

580பார்த்தது
நகைகளுடன் மணப்பெண் மாயம் - மணமகன் வீட்டார் அதிர்ச்சி
மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள அமோல் என்ற இடத்தில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. சத்யேந்திரா என்ற வாலிபர் கடந்த 2 ஆம் தேதி இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து வெளியூர் சுற்றுலா சென்ற மணமகள் திரும்பி வரவில்லை. பின்னர் அவர் நகைகளுடன் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை வீட்டார் போலீசில் புகார் அளித்துள்ளனர். வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மணமகளை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி