செளதாமணி திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது!

585பார்த்தது
செளதாமணி திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது!
பாஜக ஊடகப் பிரிவு செயலாளரான சௌதாமணியை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சியில் பாஜக ஊடகப் பிரிவு செயலாளரான சௌதாமணியை, சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்பிய புகாரில் சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே வதந்திகளை பரப்பிய வழக்கு சென்னையில் நிலுவையில் உள்ளது.

இரு மதத்தினர் இடையே மோதலை உருவாக்கும் வகையில் அடையாளம் தெரியாத நபர் பேசிய வீடியோவை பகிர்ந்து கருத்து தெரிவித்த புகாரில் ஏற்கனவே கடந்த 2022 ஜுலை மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.

தொடர்புடைய செய்தி