'கண்ணடித்தாலும் கையைப் பிடித்து இழுத்தாலும் அதிமுகவுக்கு நோ''

81பார்த்தது
'கண்ணடித்தாலும் கையைப் பிடித்து இழுத்தாலும் அதிமுகவுக்கு நோ''
திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டில் விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், அதிமுகவின் கூட்டணி கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளதாகவும், கூட்டணிக்கு வந்தால் அதிக சீட் கிடைக்கும் என்றும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள திமுக அமைச்சர் துரைமுருகன், திமுக கூட்டணியில் உள்ளவர்கள் கையைப்பிடித்து இழுத்தாலும் அதிமுக கூட்டணிக்கு வரமாட்டார்கள் என்றும் கையைப்பிடித்து இழுத்தாலும் வராதவர்கள் கண்ணடித்தால் மட்டும் வருவார்களா? என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி