“நீங்கள் நலமா" திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

67பார்த்தது
“நீங்கள் நலமா" திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வரின் முகவரித்துறையின் கீழ், பயனாளிகனைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களைக் கேட்டறியும் “நீங்கள் நலமா" என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பயனாளிகளிடம் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம், முதல்வரின் முகவரித்துறை சிறப்பு அலுவலர் மோகன் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி