குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவு

55பார்த்தது
குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐக்கு  நீதிமன்றம் உத்தரவு
அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான குட்கா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரியை நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணைக்கு அனுமதி கிடைக்கவில்லை என சிபிஐ தரப்பில் மீண்டும் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பலமுறை இதே காரணத்தை கூறுவதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, விசாரணை அதிகாரியை ஆஜராக உத்தரவிட்டு வழக்கை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்

தொடர்புடைய செய்தி