விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு தேடி போலியோ சொட்டு மருந்து

73பார்த்தது
விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு தேடி போலியோ சொட்டு மருந்து
விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு தேடி போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போலியோ தடுப்பு முகாம்களில் விடுபட்ட குழந்தைகளுக்கு அவரவர் வீடு தேடிச் சென்று சொட்டு மருந்து வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 5 வயதுக்குட்பட்ட 57.38 லட்சம் குழந்தைகளை இலக்காக கொண்டு மொத்தம் 43,051 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த நிலையில், விடுபட்ட குழந்தைகளுக்கு செவிலியர்கள் வீடு வீடாகச் சென்று சொட்டு மருந்தை வழங்கி வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி