ஜார்கண்ட் மாநிலம் சக்ரதர்பூர் கோட்டத்தில் உள்ள பாரபாம்பூ இடையே இன்று (ஜுலை 30) செவ்வாய்க்கிழமை ஹவுரா-மும்பை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் மூன்று பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு வெளியே கிடந்தன. இதில் ஏழு பயணிகள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அப்பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து காரணமாக ரயில்கள் தாமதமாகியுள்ளன.