புதுச்சேரி அருகே கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கரையைக் கடந்த புயலானது மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது. வங்கக்கடலில் உருவான இந்தப் புயல், நேற்று (நவ., 30) மாலை 5.30 மணிக்கு கரையைக் கடக்க தொடங்கிய நிலையில், இரவு 11.30 மணியளவில் முழுமையாக கரையைக் கடந்தது. ஆனாலும், சென்னை, செங்கல்பட்டு கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது.