உ.பி: மீரட் நகரில் தனது காதலியின் ஆபாச புகைப்படத்தை வைத்து மிரட்டிய நண்பனை 16 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அபினவ் என்ற சிறுவன் தனது நண்பனின் செல்போனில் இருந்து அவனது காதலியின் ஆபாச புகைப்படங்களை தனது செல்போனுக்கு அனுப்பியுள்ளான். பின், அவனது காதலியை சந்தித்து மிரட்டியுள்ளான். இதனால் பதற்றமடைந்த அந்த பெண், நடந்த சம்பவத்தை காதலனிடம் தெரிவித்தார். ஆத்திரமடைந்த காதலன், தனது நண்பன் அபினவை சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார்.