பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

51பார்த்தது
பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சில நாட்களுக்கு முன்பு சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலானது இ-மெயில் மூலம் விடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று உதகையில் 2 பிரபல தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று மதியம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உதகை அருகே உள்ள ஜே.எஸ்.எஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல் மற்றும் குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் ஸ்கூல் என இரண்டு தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் இதுவரை வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.