ஓடுபாதையில் விழுந்து நொறுங்கிய போயிங் விமானம் (வீடியோ)

68பார்த்தது
ஆப்பிரிக்க நாடான செனகல் விமான நிலையத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. செனகல் தலைநகர் டக்கருக்கு அருகே உள்ள முக்கிய விமான நிலையத்தில் ஓடுபாதையில் விமானம் சறுக்கி விழுந்தது. இச்சம்பவம் வியாழக்கிழமை(மே 9) அதிகாலை 1 மணியளவில் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. விபத்தின் போது விமானத்தில் சுமார் 73 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தாக கூறப்படுகிறது.‌ இது குறித்து வீடியோ ஒன்றும் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்தி