தடோபா சரணாலயத்தில் கருஞ்சிறுத்தை

67பார்த்தது
தடோபா சரணாலயத்தில் கருஞ்சிறுத்தை
மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தடோபா சரணாலயத்தில் கருஞ்சிறுத்தையை சுற்றுலாப் பயணிகள் பார்த்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் சரணாலயத்தின் கோலாரா வாயில் வழியாக நுழைந்தனர். இந்நிலையில், சிறிது தூரத்தில் கருஞ்சிறுத்தை ஒன்றை அவர்கள் கண்டனர். மிகவும் அரிதாக காணப்படும் இந்த சிறுத்தை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கண்ணில்பட்டதாக வனத்துறையினர் கூறினர்.

தொடர்புடைய செய்தி