மனிதர்களுக்கு நன்மைகள் அளிக்கும் சில அரிதான செடிகள் சாலையோரங்கள், வயல்வெளிகளில் சர்வசாதாரணமாக வளரும். அப்படியான ஒரு செடி தான் ’பேய்மிரட்டி’. இதில் ஆற்றல்மிக்க அனிசொமிக், ஜெரானிக் மற்றும் லுட்டுலினிக் போன்ற அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. பல் முளைக்கும் நேரங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் பேதிக்கு, இது நல்ல மருந்து. பேய்மிரட்டி, உடலில் ஏற்படும் அசதி மற்றும் தளர்ந்த உடலை வலுவாக்கும் தன்மை கொண்டது.