பெண் போலீசை திட்டிய பாஜக நிர்வாகி கைது

54பார்த்தது
போக்குவரத்து பெண் சார்பு ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சிவகங்கை நகர பாஜக தலைவர் உதயா கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல் நிலையம் முன்பு பாஜக தொண்டர்கள் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரில் பயணித்த உதயா சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து சார்பு ஆய்வாளர் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது உதயா தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்த வீடியோ ஆதாரத்துடன் பெண் சார்பு ஆய்வாளர் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி