காங்கிரஸ் வேட்பாளர் மீது சரமாரி தாக்குதல் (வீடியோ)

80பார்த்தது
நாடு முழுவதும் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு, வடகிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கன்ஹையா குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் இவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவர் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் தொடர்பான காணொளிகள் வெளியாகியுள்ளன. கிழக்கு டெல்லியின் நியூ உஸ்மான்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதல் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி